Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜூன் (ஹி.ச)
போரூர் மேம்பாலத்தில் இன்று மதியம் முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
போரூர் சந்திப்பில் இருந்து கிண்டி நோக்கிச் செல்லும் பிரதான சாலையில் வாகனங்கள் நகர முடியாமல் கிலோமீட்டர் கணக்கில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
குறிப்பாக மேம்பாலத்தின் மேல் பகுதியில் இருசக்கர வாகனங்கள், கார்கள், பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஸ்தம்பித்து நின்றதால், பயண நேரம் பல மடங்கு அதிகரித்தது.
நெரிசலுக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெளிவான தகவல் இல்லை என்றாலும், மேம்பாலத்தின் கிண்டி முனையில் ஏற்பட்ட சிறு விபத்து மற்றும் ஆம்புலன்ஸ் கடந்து சென்றதால் வாகனங்கள் திடீரென நிறுத்தப்பட்டதே முக்கிய காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
போக்குவரத்து காவல்துறையினர் நெரிசலை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் போரூர் சுங்கச்சாவடி, ராமாபுரம், மனப்பாக்கம் வழியாக கிண்டி செல்லும் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b