கோவில் தீமிதி திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் - பாதுகாப்பிற்கு போலீஸ் இல்லாததால் தள்ளுமுள்ளு!!
திண்டுக்கல் , 10 ஜூன் (ஹி.ச.) பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் உள்ள அருள்மிகு மண்டு காளியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து பாதிப்புகள்கோவில் நிர்வாகத்தின் ச
A


திண்டுக்கல் , 10 ஜூன் (ஹி.ச.)

பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் உள்ள அருள்மிகு மண்டு காளியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து பாதிப்புகள்கோவில் நிர்வாகத்தின் சார்பில் உரிய தடுப்புகள் (Barricades) அமைக்கப்படாததாலும், போதிய பாதுகாப்புப் போலீசார் இல்லாததாலும் பயங்கர தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதில் 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே விழுந்தனர்; நெய்க்காரப்பட்டியிலிருந்து உடுமலை செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும், பள்ளி வாகனங்களும் நீண்ட நேரம் நெரிசலில் சிக்கித் தவித்தனர்.

பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், போக்குவரத்துப் பாதிப்பைத் தவிர்க்கவும் கோவில் நிர்வாகமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA