5 அணைகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிப்பு - ஆட்சியர் அறிவுறுத்தல்
தென்காசி, 10 ஜூன் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மிதமான மழையானது த
Tenkasi Collector Ranjeet Singh


தென்காசி, 10 ஜூன் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மிதமான மழையானது தொடர்ந்து பெய்து வருவதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் அனைத்திலும் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ளது.

மேலும், தென்மேற்கு பருவமழை தீவிரத்தின் காரணமாக நீர்நிலைகள் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் இருக்க தென்காசி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் செய்துள்ளது. குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம், கருப்பாநதி நீர் தேக்கம், ராமநதி நீர்த்தேக்கம், கடனாநதி நீர்த்தேக்கம், குண்டாறு நீர்த்தேக்கம் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் போது வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், மரங்கள் மற்றும் உலக கட்டமைப்புகளின் கீழ் பொதுமக்கள் நிற்பதை தவிர்க்க வேண்டும் எனவும் தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்றுப்படுகைகள் அருகே கால்நடைகள் எதுவும் கட்டி வைக்க வேண்டாம் எனவும், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும் தென்காசி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் செய்துள்ளது.

மேலும், அவசர காலங்களில் ஏதேனும் பொது மக்களுக்கு தேவை ஏற்பட்டால் 24 மணி நேரமும் செயல்படும் தென்காசி மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்ணான 1077 என்ற எண்ணிற்கும், 04633-290546 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு மழை வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜித் சிங் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN