அதே டெய்லர் அதே வாடகை - தவெக அரசை விமர்சித்த அண்ணாமலை
சென்னை , 10 ஜூன் (ஹி.ச.) சில தொலைக்காட்சி செய்தி சேனல்களின் ஒளிபரப்பு தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை முன்வைத்து அண்ணாமலை தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், குறிப்பிட்ட மூன்று
அண்ணாமலை


சென்னை , 10

ஜூன் (ஹி.ச.)

சில தொலைக்காட்சி செய்தி சேனல்களின் ஒளிபரப்பு தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை முன்வைத்து அண்ணாமலை தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,

குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிபரப்பு தடை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டதற்கு முதலில் நன்றி. ஆனால், அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் ஊடகங்களுக்கு மட்டுமே செட்டாப் பாக்ஸ்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவது எப்படி?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மக்களிடையே பொய்யான தகவல்களை உண்மையாக நம்பவைக்க, கடந்த ஆட்சியில் உருவாக்கப்பட்ட TN Fact Check தளம் தற்போதும் அதே பணியைத் தொடர்கிறது.

இது மாற்றம் அல்ல,பழைய செயல்பாடுகளின் தொடர்ச்சியே என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன், இது மாற்றம் இல்லை,கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த அதே டெய்லர், அதே வாடகை ஏமாற்று வேலை எனவும் அண்ணாமலை தனது பதிவில் விமர்சித்துள்ளார்.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,

அரசு கேபிளில் இருந்து பாலிமர், நியூஸ் தமிழ் 24*7, தமிழ் ஜனம் ஆகிய மூன்று செய்திச் சேனல்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்குத் தமிழக அரசு தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் (TN Fact Check) மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ விளக்கத்தில்,

சேனல்கள் நீக்கப்படவில்லை என்றும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே சில செட்-ஆஃப் பாக்ஸ்களில் தற்காலிகமாக ஒளிபரப்பு தடைபட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam