Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜூன் (ஹி.ச.)
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர் பாரதிராஜா உடல்நலக் குறைவால் இன்று (ஜூன் 10, 2026)
சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84.
சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முன்னாள் துணை முதல்வரும், தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மூச்சுத்திணறல் காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா, இன்று அதிகாலை தனது இல்லத்தில் காலமானார்.
கடந்த மார்ச் மாதம் தனது மகன் மனோஜ் பாரதிராஜாவின் திடீர் மறைவுக்குப் பிறகு உடல்நலம் குன்றியிருந்தார் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
நீலாங்கரை இல்லத்தில் அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின், பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
கிராமிய மணத்தை திரையில் கொண்டு வந்து தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய இயக்குநர் இமயத்தின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என அவர் உருக்கமாக தெரிவித்தார்.
தமிழ் திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b