தமிழக நூலக இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் - வே.தில்லைநாயகம்..!
தமிழ்நாடு, 10 ஜூன் (ஹி.ச.) வே. தில்லைநாயகம் ஜூன் 10, 1925 - மார்ச் 11, 2013 தமிழக நூலகத்துறையின் முன்னோடியாகவும், தமிழ்நாட்டு அரசு பொதுநூலகத்துறையின் முதல் தொழில்முறை நூலக இயக்குநராகவும் (Professional Library Director) அறியப்படுபவர். ''வேதி''
க


தமிழ்நாடு, 10 ஜூன் (ஹி.ச.)

வே. தில்லைநாயகம் ஜூன் 10, 1925 - மார்ச் 11, 2013 தமிழக நூலகத்துறையின் முன்னோடியாகவும், தமிழ்நாட்டு அரசு பொதுநூலகத்துறையின் முதல் தொழில்முறை நூலக இயக்குநராகவும் (Professional Library Director) அறியப்படுபவர்.

'வேதி' என்ற புனைப்பெயராலும் இவர் அழைக்கப்படுகிறார்.

நூலகத் துறையில் இவரது ஈடுபாடான சேவையின் காரணமாக இவர் தமிழக நூலக இயக்கத்தின் தந்தை என்றும் போற்றப்படுகிறார்.

கன்னிமாரா பொதுநூலகத்தின் முதல் தொழில்முறை நூலகராகப் பணியாற்றிய பெருமை இவரையே சாரும்.

துறைத் தலைவர்:

தமிழ்நாட்டு அரசு பொதுநூலகத்துறையை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றி, அதன் முதல் இயக்குநராக உயர்ந்தவர்.

படைப்புகள்:

நூலக அறிவியல் சார்ந்த பல நூல்களையும், தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணம் தொடர்பான பல அரிய நூல்களையும் எழுதியுள்ளார்.

இவர் எழுதிய நூலக அறிவியல் என்ற புத்தகம் மிகவும் புகழ்பெற்றது.

நூற்றாண்டு:

ஜூன் 10, 1925-ல் பிறந்த இவரின் நூற்றாண்டு விழா 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

தமிழ்நாடு நூலகத்துறையின் முன்னோடி வே.தில்லைநாயகம் 1925ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்தார்.

இவர் 1949ஆம் ஆண்டு அரசு உதவியுடன் நூலகப் பயிற்சி பெற்று, பொதுக்கல்வித்துறை இயக்க முதல் நூலகரானார்.

ஒரே துறையில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக நூலகத்துறை இயக்குநராக பதவி வகித்து, தமிழ்நாடு நூலக இயக்கத்தின் பொற்காலமாக மாற்றிய இவர் 1982ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இவர் எழுதிய 'இந்திய நூலக இயக்கம்' என்ற நூலுக்காக உலக பல்கலைக்கழகம் 1982ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

தமிழில் 'வேதியம் 1008' உட்பட சில நூல்களை எழுதியுள்ளார். இவரது பல நூல்கள் தமிழ்நாடு அரசின் முதல் பரிசை பெற்றவை.

தமிழ்நாடு பொது நூலக இயக்கத்தின் தந்தை வே.தில்லைநாயகம் 2013ஆம் ஆண்டு மறைந்தார்.

Hindusthan Samachar / Durai.J