ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்விற்கான விண்ணப்பப்பதிவு ஜூன் 15-ந்தேதி தொடக்கம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
சென்னை, 10 ஜூன் (ஹி.ச.) தமிழக அரசு பள்ளிகளில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு 2026-2027-ம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முகமை (எமிஸ்) இணையதளம் வாயிலாக நடைபெறும். அந்த வகையில் மாறு
ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்விற்கான விண்ணப்பப்பதிவு ஜூன் 15-ந்தேதி தொடக்கம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


சென்னை, 10 ஜூன் (ஹி.ச.)

தமிழக அரசு பள்ளிகளில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு 2026-2027-ம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இந்த கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முகமை (எமிஸ்) இணையதளம் வாயிலாக நடைபெறும்.

அந்த வகையில் மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களை இந்த இணையதளத்தில் வருகிற

15-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை பதிவேற்றம் செய்துக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குனர் பி.ஏ.நரேஷ் ஆகியோர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் (தொடக்கக் கல்வி) ஆகியோருக்கு கூட்டாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

அதன்படி, மாறுதலுக்கு விருப்பம் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.

தற்போது பணியாற்றும் பள்ளியில் ஓராண்டு பணி நிறைவடைந்து இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

பள்ளிக்கல்வித்துறையில் மாறுதல் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமை பட்டியல் வருகிற 30-ந்தேதி வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடைபெறும்.

அதேபோல், தொடக்கக்கல்வித் துறையில் மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் வருகிற 25-ந் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூலை 16-ந்தேதி வரை நடைபெறும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b