பாஜக நிர்வாகிகள் மோதலை நிறுத்த வேண்டும் ,வளர்ச்சியடைந்த பாரதமே இலக்கு – நாராயணன் திருப்பதி
சென்னை, 11 ஜூன் (ஹி.ச) பாரதிய ஜனதா கட்சியினரிடையே நடைபெற்று வரும் கருத்து மோதல்களை மறைமுகமாக சுட்டிக்காட்டி, ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை நிறுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி எக்ஸ் தளத்தில
Narayanan


Hh


சென்னை, 11 ஜூன் (ஹி.ச)

பாரதிய ஜனதா கட்சியினரிடையே நடைபெற்று வரும் கருத்து மோதல்களை மறைமுகமாக சுட்டிக்காட்டி, ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை நிறுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்ற பழமொழியை குறிப்பிட்டு, கட்சிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் சிலர் மகிழ்ச்சியடையும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஒருவர் மீது ஒருவர் புழுதி வாரித் தூற்றுவதை தவிர்த்து, கடந்த கால பயணம், தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து நிதானமாக சிந்தித்து திட்டமிட வேண்டும் என்றும், சிலரின் தனிப்பட்ட விரோதங்களுக்கு பலியாகாமல் செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பாஜகவின் இலக்கு “வளர்ச்சியடைந்த பாரதம்” என்பதை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும் என்றும், செல்லும் பாதைகள் வேறுபட்டாலும் சென்றடையும் இலக்கு ஒன்றே என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் நாராயணன் திருப்பதி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ