Enter your Email Address to subscribe to our newsletters

கோவில்பட்டி, 11 ஜூன் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மயில் ஓடை பகுதியைச் இளம்பெண் அபி செல்வி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்பவரை இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் பழகி காதலித்து வந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காதல் விவகாரம் தொடர்பாக வீட்டில் ஏற்பட்ட தகராறில், அபி செல்வியை அவரது தாய் மற்றும் சகோதரர் இருவரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அபி செல்வி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இளம்பெண்ணின் தாய் மற்றும் சகோதரரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகன்நாதன்,
மயில் ஓடையில் நடந்தது ஆணவப்படுகொலை அல்ல. குடும்ப பிரச்சினையின் பின்னணியில் நடைபெற்ற கொலை சம்பவம் இது. குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை தொடர்கிறது என்று தெரிவித்தார்.
சமூக வலைதள காதலால் ஏற்பட்ட இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b