Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 11 ஜூன் (ஹி.ச.)
கோவையில் கடந்த மே 21 ஆம் தேதி சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கார்த்தி என்பவர் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபராகவும், அவருக்கு உதவி செய்ததாக மோகன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டு இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 2 பேரிடம் 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகலை கொடுக்க கைது செய்யப்பட்டவர்களை கோவை மத்திய சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் போக்சோ நீதிமன்றத்திற்கு காவல்துறையினர் அழைத்து வந்தனர்.
அவர்களிடம் நீதிபதி முன்னிலையில் நேரடியாக 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை நகலை வழங்கினர்.
குற்றப்பத்திரிகை கைது செய்யப்பட்டவர்களிடம் நீதிமன்றத்தில் ஒப்படைத்த நிலையில் பின்னர் மீண்டும் அவர்களை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN