டெல்லியில் இன்று காங்கிரஸ் அவசர ஆலோசனைக் கூட்டம் - சோனியா, ராகுல் காந்தி பங்கேற்பு
புதுடெல்லி, 11 ஜூன் (ஹி.ச.) டெல்லியில் உள்ள இந்திரா பவனில் காங்கிரஸ் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட மூ
ராகுல்


புதுடெல்லி, 11 ஜூன் (ஹி.ச.)

டெல்லியில் உள்ள இந்திரா பவனில் காங்கிரஸ் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், தேசிய அளவில் நிலவும் முக்கிய பிரச்சினைகள் மற்றும் மாநில வாரியான அரசியல் நிலவரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மாநிலத் தலைவர்களை மாற்றுவது தொடர்பாகவும் கட்சித் தலைமை ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

வரவிருக்கும் தேர்தல்கள், கூட்டணி அரசியல் மற்றும் கட்சியின் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P