Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 11 ஜூன் (ஹி.ச.)
டெல்லியில் நிதி ஆயோக் கவுன்சிலின் 11-வது கூட்டம் இன்று நடைபெறுகிறது. டெல்லி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார மையத்தில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார்.
இதில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றார்.
நேற்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்தார். இதன் பிறகு அவர் இரவு 7.30 மணி அளவில் தமிழ்நாடு அரசு இல்லத்துக்கு திரும்பினார்.
இந்நிலையில் இன்று காலை தமிழ்நாடு இல்லத்தில் உணவகத்தில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் இருந்து தீ பரவியது.
மின்கசிவு காரணமாக டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P