Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 11 ஜூன் (ஹி.ச.)
இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இயக்குநர் சேரன் தனது எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,
பாரதிராஜா என்ற பெயரை உச்சரிக்காத தமிழர்கள் இருக்க முடியாது. 'என் இனிய தமிழ் மக்களே' என்ற அவரது குரலை ரசிக்காதவர்களும் இல்லை. அவரது படைப்புகளைப் பார்த்து வியக்காத கண்களும் இல்லை. அவரின் படைப்புகளின் தாக்கத்தில்தான் இன்றைய பல இயக்குநர்கள் உருவாகியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எங்களை கைபிடித்து நல்ல சினிமாவை நோக்கி வழிநடத்திய மாபெரும் கலைஞன் பாரதிராஜா. எங்களின் படைப்புகளுக்கு கிடைக்கும் பெருமையில் 50 சதவீத உரிமை அவருக்கே உண்டு. அவரது வரலாறு இன்றோடு முடிவடைவதில்லை. எதிர்காலத்தில் பண்பாடு, கலை, இலக்கிய ஆய்வுகளில் தமிழ்சினிமா குறித்து பேசப்படும் போதெல்லாம் பாரதிராஜாவின் படைப்புகள் பொக்கிஷங்களாக மீண்டும் மீண்டும் கண்டெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இறுதியாக, நம் முன்னோடிகளின் பாதச்சுவடுகளை பாதுகாத்து, அவர்களை வணங்கி போற்றுவோம் என்று சேரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ