தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு குழுவினருடன் ஸ்டாலின் 2-வது நாளாக ஆலோசனை
சென்னை, 11 ஜூன் (ஹி.ச.) சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்ட குழுவினருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாக இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தேர்தல் தோல்விக்கான காரணங்கள், வாக்காளர்களின் மனநிலை, தொகுதி வாரியான நி
மு.க.ஸ்டாலின்


சென்னை, 11 ஜூன் (ஹி.ச.)

சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்ட குழுவினருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாக இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

தேர்தல் தோல்விக்கான காரணங்கள், வாக்காளர்களின் மனநிலை, தொகுதி வாரியான நிலவரம் உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட 38 பேர் கொண்ட 19 அணிகள் மாநிலம் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.

இதில், இதுவரை திமுக தலைவரை சந்தித்து அறிக்கை சமர்ப்பிக்காத குழுவினர் இன்று நேரில் சந்தித்து தங்களது ஆய்வறிக்கைகளை வழங்கி ஆலோசனை நடத்துகின்றனர்.

இந்த ஆலோசனையில் பரந்தாமன், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தாயகம் கவி, மருது கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று, தேர்தல் முடிவுகள் தொடர்பான தங்களது கள ஆய்வு அறிக்கைகளை ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கின்றனர்.

தொகுதி வாரியான தேர்தல் செயல்பாடுகள், கூட்டணி கட்சிகளின் செயல்திறன், வாக்கு சரிவு ஏற்பட்ட பகுதிகள் மற்றும் எதிர்கால அரசியல் வியூகங்கள் குறித்து இந்த ஆலோசனையில் விரிவாக விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P