Enter your Email Address to subscribe to our newsletters

லண்டன், 11 ஜூன் (ஹி.ச.)
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், லண்டனில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிச்சா கோஷ் தனி ஆளாக போராடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் அரைசதம் அடித்து 68 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
மற்ற வீராங்கனைகள் நிலைத்து நின்று ஆடத் தவறியதால் இந்திய அணி 19.5 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பயிற்சி ஆட்டத்தில் வெற்றியுடன் உலகக் கோப்பை தொடரை எதிர்கொள்ளும் நம்பிக்கையை பெற்றுள்ளது.
இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. ரிச்சா கோஷின் அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு ஆறுதலாக அமைந்தது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA