கேரண்டி திட்ட பயனாளிகள் எண்ணிக்கையை குறைக்க மாட்டோம் - முதல்வர் டி.கே. சிவகுமார்
புதுடெல்லி , 11 ஜூன் (ஹி.ச.) கர்நாடக அரசின் கேரண்டி திட்டங்களின் பயனாளிகள் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும், தகுதியானவர்களுக்கு மட்டுமே திட்டப் பலன்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே சரிபார்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வர
A


புதுடெல்லி , 11 ஜூன் (ஹி.ச.)

கர்நாடக அரசின் கேரண்டி திட்டங்களின் பயனாளிகள் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும், தகுதியானவர்களுக்கு மட்டுமே திட்டப் பலன்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே சரிபார்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணை முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்திருந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கிருஹ லட்சுமி திட்டத்தின் கீழ் சில இடங்களில் இறந்தவர்களின் பெயரிலும் பணம் பெறப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேறு மொபைல் எண்களை இணைத்து மோசடிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அதேபோல், கிருஹ ஜோதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச மின்சாரத்தை சிலர் வீட்டு பயன்பாட்டுக்கு பதிலாக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

ஒரு நபரின் பெயரில் 6 மின்சார மீட்டர்கள் இருப்பது போன்ற முறைகேடுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

இதுபோன்ற மோசடிகளை தடுக்கவும், தகுதியற்ற பயனாளிகளை கண்டறியவும் மட்டுமே சரிபார்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கேரண்டி திட்டங்களை குறைப்பதோ அல்லது பயனாளிகளின் எண்ணிக்கையை சுருக்குவதோ அரசின் நோக்கம் அல்ல.

பிரதமரை சந்திக்க நேரம்

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி வந்துள்ளேன்.

இந்த பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகளை சந்திக்க நேரம் கோரியுள்ளேன். பிரதமர் நாளை சந்திக்க நேரம் வழங்கியுள்ளார்.

மேலும், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை மந்திரி மனோகர் லால் கட்டாரை சந்தித்து, மாநிலத்தில் செயல்படுத்தப்பட உள்ள மெட்ரோ டபுள் டெக்கர் திட்டத்திற்கு தேவையான அனுமதிகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டேன்.

அமைச்சரவை விரிவாக்கம் இல்லை

மாநில அமைச்சரவை விரிவாக்கம் குறித்து தற்போது எந்தவித ஆலோசனையும் நடைபெறவில்லை.

இதற்கிடையே, மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் மீனாட்சி நடராஜனின் மாநிலங்களவை வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், அது ஜனநாயகத்தை தலைகுனியச் செய்யும் அரசியல் சதி என்று குற்றம்சாட்டினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA