முதலமைச்சர் விஜய்யை கோட்டையில் அமர்த்திய மண் கரூர் - சவுக்கு சங்கர்
கரூர், 11 ஜூன் (ஹி.ச.) கரூர் காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவருக்கு சவுக்கு யூடியூப்பில் பணிபுரிந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதை அடுத்து எங்கள் யூடியூப்பில் வ
Savukku Shankar


கரூர், 11 ஜூன் (ஹி.ச.)

கரூர் காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

இவருக்கு சவுக்கு யூடியூப்பில் பணிபுரிந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இதை அடுத்து எங்கள் யூடியூப்பில் விளம்பரம் செய்தால் உங்கள் நிறுவனம் மிகப் பெரிய அளவில் வளரும் என ஆசை வார்த்தை கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் கிருஷ்ணன் தன் மனைவியிடமிருந்து சுமார் 7 லட்சம் ரூபாய் பெற்று விக்னேஸ்வரனிடம் கொடுத்து உள்ளார். ஆனால் விக்னேஷ் சொன்னபடி நடந்து கொள்ளாததால், விக்னேஷை தொடர்பு கொண்ட கிருஷ்ணன் தனது பணத்தை திரும்ப கேட்ட பொழுது, பணம் தர முடியாது என ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கிருஷ்ணன், விக்னேஷ் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு விசாரணை கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று (ஜூன் 11 ஆம் தேதி) வழக்கில் தொடர்புடைய விக்னேஷ் மற்றும் சவுக்கு சங்கர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

தொடர்ந்து கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

தவெக அரசு ஒரு மாதம் நிறைவு பெற்றுள்ளது. விஜய் அவர்களை இந்த மண்தான் கோட்டையில் அமர்த்தி உள்ளது. அதனை மறுக்க முடியாது. பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்தனர்.

அப்போது இருந்த அரசு, போதுமான பாதுகாப்பு வழங்காத காரணத்தால் விஜய் அவர்களால் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட முடியவில்லை. உறவினர்களையும் பிள்ளைகளையும் இழந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்ல கூட பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்தது.

மாமல்லபுரத்துக்கு பாதிக்கப்பட்டவர்களை வரச் சொல்லி ஆறுதல் கூறினார். தற்போது விஜய் அவர்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. பதவி ஏற்றதும் முதல் முறையாக கரூருக்கு வருகை தந்து உயிரிழந்த மக்களின் படத்திற்கு அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்த்தேன்.

இப்போதாவது முதல்வர் விஜய் அவர்கள் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் பகுதிக்கு வந்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கோரிக்கை வைத்தார்.

Hindusthan Samachar / ANANDHAN