Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜூன் (ஹி.ச.)
தமிழகத்தின் ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் வரவிருக்கும் தேர்தல் வியூகங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
மாநிலம் முழுவதும் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது மற்றும் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெறும் இந்தக் கூட்டம், தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / vidya.b