மாநிலங்களவை தேர்தலில் மீனாட்சி நடராஜன் வேட்பு மனு நிராகரிப்பு - உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை
புதுடெல்லி, 11 ஜூன் (ஹி.ச.) ஜூன் 18 ஆம் தேதி தமிழகம், கர்நாடகா, மத்திய பிரதேசம் உட்பட நாடு முழுதும் காலியாக உள்ள, 26 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் மத்திய பி
மாநிலங்களவை தேர்தலில் மீனாட்சி நடராஜன் வேட்பு மனு நிராகரிப்பு - உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை


புதுடெல்லி, 11 ஜூன் (ஹி.ச.)

ஜூன் 18 ஆம் தேதி தமிழகம், கர்நாடகா, மத்திய பிரதேசம் உட்பட நாடு முழுதும் காலியாக உள்ள, 26 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசத்தில், மூன்று மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

மத்திய பிரதேசத்தில் முன்னாள் எம்.பி., மீனாட்சி நடராஜன் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஆனால் அவரது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்தார்.

தெலுங்கானாவில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை அவர் மறைத்ததாக, பா.ஜ.வேட்பாளர் மகேஷ் கெவத் அளித்த புகாரின்படி,

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக, டில்லியில், தேர்தல் கமிஷன் அதிகாரிகளை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினர்.

இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் மீனாட்சி நடராஜன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை நாளை (ஜூன் 12) நடைபெற உள்ளது.

இருப்பினும், நீதிபதிகள் பிரஷாந்த் குமார் மிஸ்ரா மற்றும் அதுல் எஸ் சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு, நடைபெற்று வரும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த மனு எவ்வாறு ஏற்கத்தக்கது என கேள்வி எழுப்பி உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b