மூன்று மாதங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு
மதுரை, 11 ஜூன் (ஹி.ச.) உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் குடமுழுக்கு திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கோயிலின் கட்
மூன்று மாதங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு


மதுரை, 11 ஜூன் (ஹி.ச.)

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் குடமுழுக்கு திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கோயிலின் கட்டுமான மற்றும் சீரமைப்புப் பணிகள் தற்போது 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகக் கூறினார்.

மீதமுள்ள பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு, பக்தர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மகா குடமுழுக்கு விழா மூன்று மாத காலத்திற்குள் வெகு விமரிசையாக நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தப்படுவது மரபு. அந்த வகையில் மீனாட்சி அம்மன் கோயிலில் கடைசியாக 2013-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.

தற்போது ராஜகோபுரங்கள், விமானங்கள், மண்டபங்கள் ஆகியவற்றுக்கு வர்ணம் பூசுதல், சிற்பங்களைப் புதுப்பித்தல், தங்க முலாம் பூசும் பணிகள் உள்ளிட்ட அனைத்து திருப்பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

குடமுழுக்கு விழாவிற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ரமேஷ் மேலும் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b