கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு எதிரொலி - சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் பிரபு அவசர ஆலோசனை
சென்னை, 11 ஜூன் (ஹி.ச.) தமிழகத்தில் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ள நிலையில், அதுகுறித்து இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பிரபு இன்று அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கிண்டியில் உள்ள புவியியல
Prabhu


சென்னை, 11 ஜூன் (ஹி.ச.)

தமிழகத்தில் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ள நிலையில், அதுகுறித்து இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பிரபு இன்று அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை கிண்டியில் உள்ள புவியியல் மற்றும் சுரங்க ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனையில், குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் பிரபு முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து லாரி உரிமையாளர்கள் சங்கம், செங்கல் சூளை உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் அவர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

சமீப நாட்களாக எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்திருப்பது கட்டுமானத் துறையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விலையேற்றத்திற்கான காரணங்கள் மற்றும் விலையை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

கட்டுமானப் பொருட்களின் விலையை குறைத்து நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விரைவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ