Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜூன் (ஹி.ச)
தமிழகம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை உரிய காலத்தில் வரவு வைக்கப்படவில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.
இதனைக் கண்டித்து மாநிலம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகை, கொள்முதல் செய்யப்பட்ட நாளில் இருந்து ஒரு வார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
கொள்முதல் தொகை தாமதமாவதால் விவசாயிகள் எதிர்கொண்டு வந்த நிதி நெருக்கடிக்கு இந்த அறிவிப்பு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகளின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு கூட்டமைப்பு தரப்பில் இருந்து இந்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b