Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 11 ஜூன் (ஹி.ச.)
பெட்ரோலில் எத்தனால் கலப்பை அதிகரிக்கும் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், அதிக சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு கலால் வரி விலக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் தற்போது 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) இலக்கு எதிர்பார்த்ததைவிட முன்கூட்டியே எட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, பெட்ரோலில் 22 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை எத்தனால் கலப்பை அதிகரிக்கும் வாய்ப்புகளை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.
கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து, உள்நாட்டு உயிரி எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, 22%, 25%, 27% மற்றும் 30% எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு கலால் வரி விலக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது எத்தனால் கலப்பை ஊக்குவிக்கும் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் பலனாக இருக்கும் என கூறப்படுகிறது.
எனினும், இந்த வரி விலக்கு பெற பெட்ரோலுக்கான உரிய வரிகள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் மற்றும் எத்தனாலுக்கு பொருந்தும் ஜி.எஸ்.டி. (GST) விதிகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA