பென்னாகரம் அருகே ஊருக்குள் புகுந்த 6 காட்டு யானைகள் - பொதுமக்கள் பீதி
தர்மபுரி, 11 ஜூன் (ஹி.ச.) தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் பகுதியில் 6 காட்டு யானைகள் திடீரென ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள், ஏரியூர் சு
யானை


தர்மபுரி, 11 ஜூன் (ஹி.ச.)

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் பகுதியில் 6 காட்டு யானைகள் திடீரென ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள், ஏரியூர் சுற்றுவட்டார விவசாய நிலங்களுக்குள் நுழைந்து ராகி, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கிராம மக்கள் பென்னாகரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து யானைகள் நடமாட்டம் காணப்படுவதால், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும், இரவு நேரங்களில் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும், யானைகள் தென்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஊருக்குள் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய சம்பவம் ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam