என் வாழ்க்கையின் இரண்டு தூண்களையும் இழந்துவிட்டேன் – ராதிகா சரத்குமார் உருக்கம்
சென்னை, 11 ஜூன் (ஹி.ச.) இயக்குநர் பாரதிராஜா மறைவைத் தொடர்ந்து நடிகை ராதிகா சரத்குமார் தனது ஆழ்ந்த இரங்கலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், என்னை உருவாக்கிய இரண்டு பேர்கள். ஒருவர் என் தாய்: மற்றொருவர் என் குருநாதர் பாரதிராஜா அவர்க
Radhi


Hh


சென்னை, 11 ஜூன் (ஹி.ச.)

இயக்குநர் பாரதிராஜா மறைவைத் தொடர்ந்து நடிகை ராதிகா சரத்குமார் தனது ஆழ்ந்த இரங்கலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்,

என்னை உருவாக்கிய இரண்டு பேர்கள். ஒருவர் என் தாய்:

மற்றொருவர் என் குருநாதர் பாரதிராஜா அவர்கள். இந்த ஒரே ஆண்டில் அந்த இரண்டு தூண்களையும் நான் இழந்துவிட்டேன். இந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. சொல்ல வார்த்தைகள் வரவில்லை. மனம் கனத்திருக்கிறது என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது துயரத்தை பகிர்ந்து கொண்டு, அன்பும் ஆதரவும் வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள அவர், அவர்களின் நினைவுகளும், அவர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்த வாழ்க்கைப் பாடங்களும் என்னுடன் என்றும் பயணிக்கும் என்று உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார்.

ராதிகா சரத்குமாரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ