Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 11 ஜூன் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதியில் இருந்து தொடர்ந்து வலி நிவாரணி மாத்திரைகள், கஞ்சா, பீடி இலைகள்,சமையல் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவதும் அவ்வப்போது கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பதும் தொடர்கதை ஆகி வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பெட்டி பெட்டியாக பொருட்கள் கடத்த இருப்பதாக கியூ ப்ராஞ்ச் போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து க்யூ பிரான்ச் ஆய்வாளர் அவர்களுடைய தலைமையில் அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது அந்தப் பகுதியில் எட்டு பெட்டிகளில் 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பதை கண்டறிந்து அதனை பறிமுதல் செய்தனர்.
இதனுடைய மதிப்பு 40 லட்சம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடத்தல் காரர்கள் தப்பி ஓடிய நிலையில் அவர்களை தேடி வருகின்றனர்
பறிமுதல் செய்யப்பட்ட அந்த வலி நிவாரணி மாத்திரைகளை ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN