Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜூன் (ஹி.ச.)
மாநில விரைவு போக்குவரத்துக் கழகமான State Express Transport Corporation (SETC) பேருந்துகளில் பயணிகள் இனி ஆன்லைன் மூலமாக மட்டுமே டிக்கெட் பெறும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய முறையின் கீழ், பேருந்துகளில் நடத்துநரிடம் நேரடியாக டிக்கெட் பெறும் வசதி இருக்காது என்றும், பயணிகள் இணையதளம், செயலி அல்லது பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாக முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்ய வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
நிகழ்நேர (Real-Time) தரவுகள் அடிப்படையில் இருக்கை விவரங்கள் மற்றும் டிக்கெட் முன்பதிவு மேற்கொள்ளப்படும் வகையில் இணையதளம் மற்றும் மொபைல் செயலியை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறைகள் மற்றும் விழாக்காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் டிக்கெட் சிரமங்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய நடைமுறை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P