Enter your Email Address to subscribe to our newsletters

ராசிபுரம், 11 ஜூன் (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட கூலித் தொழிலாளி ஒருவர், அவரை திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே உள்ள வேப்பூர் செக்கடியைச் சேர்ந்த ஏழுமலை மகன் கருப்பன், வயது 28, என்பவர் இன்ஸ்டாகிராம் வாயிலாக மாணவியிடம் தொடர்ந்து பேசி நம்பிக்கையை பெற்றுள்ளார்.
அதன்பின் மாணவியை ஏமாற்றி திருவண்ணாமலையில் உள்ள சாத்தனூர் அணையை சுற்றிக்காட்டுவதாக கூறி அழைத்துச் சென்று அங்கு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், கருப்பனை கைது செய்தனர்.
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட கருப்பனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகம் இல்லாத நபர்களுடன் பழகும் போது பள்ளி மாணவ, மாணவிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என காவல்துறையினர் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b