புதிய ஆந்திரா ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு அமைச்சர் லோகேஷ் வாழ்த்து
அமராவதி , 12 ஜூன் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேச தகவல் தொழில்நுட்பம் மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் லோகேஷ், மாநிலத்திலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர்களை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். இந்த சந்திப்பில் புதிய எம்.பி.க்
A


அமராவதி , 12 ஜூன் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேச தகவல் தொழில்நுட்பம் மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் லோகேஷ், மாநிலத்திலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர்களை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் புதிய எம்.பி.க்களான சிந்தகாயலா விஜய், சனா சதீஷ், பாஷ்யம் ராமகிருஷ்ணா ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய அமைச்சர் லோகேஷ்,

நாடாளுமன்றத்தில் ஆந்திரப் பிரதேச மக்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகளை வலுவாக முன்வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மாநிலத்தின் வளர்ச்சி, நலத்திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக இருந்து மாநில வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பு குறித்து தனது ‘எக்ஸ்’ வலைதளப் பதிவிலும் லோகேஷ் தகவல் பகிர்ந்துள்ளார்.

புதிய உறுப்பினர்கள் மாநில மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA