பூண்டு மூட்டைகளுக்குள் மறைத்து குட்கா கடத்தல்- இருவர் கைது
ஈரோடு, 12 ஜூன் (ஹி.ச.) கர்நாடக மாநிலத்திலிருந்து கோவை நோக்கி சென்ற பிக்கப் வாகனம் ஒன்று ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி வழியாக வந்தபோது, சந்தேகத்தின் பேரில் பர்கூர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனத்தில்
Arrest


ஈரோடு, 12 ஜூன் (ஹி.ச.)

கர்நாடக மாநிலத்திலிருந்து கோவை நோக்கி சென்ற பிக்கப் வாகனம் ஒன்று ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி வழியாக வந்தபோது, சந்தேகத்தின் பேரில் பர்கூர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த பூண்டு மூட்டைகளை ஆய்வு செய்தபோது, அவற்றுக்கு நடுவே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, வாகனத்தில் இருந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கர்நாடக மாநிலத்திலிருந்து குட்கா பொருட்களை கோவைக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.

இந்த வழக்கில் வாகன ஓட்டுநர் நௌசாத் சபீக் மற்றும் முபாரக் அலி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், ரூ.3.54 லட்சம் மதிப்பிலான 439 கிலோ குட்கா பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்ந்து, குட்கா பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, யாருக்கு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டது, இந்த கடத்தலுக்கு பின்னால் வேறு நபர்கள் தொடர்புடையவர்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பர்கூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN