Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 12 ஜூன் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்தானது தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது வெள்ளப்பருக்கானது ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலுமே வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளிக்க தடையானது விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவியில் பராமரிப்பு பணி காரணமாக முன்னதாகவே குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், மற்ற அருவிகளில் நேற்று மாலை முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டன.
இந்த நிலையில், தற்போதும் மழை குறையாமல் அருவிகளில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டு வருவதால் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN