Enter your Email Address to subscribe to our newsletters

கர்நாடகா, 12 ஜூன் (ஹி.ச.)
தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் நேற்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், நீட் விலக்கு, கல்வி நிதி உள்ளிட்ட தமிழ் நாட்டின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
நிதி ஆயோக் கூட்டம் முடிவடைந்ததையடுத்து முதலமைச்சர் விஜய் டெல்லியில் உள்ள தமிழ் நாடு அரசு இல்லத்தில் ஓய்வெடுத்தார்.
தொடர்ந்து அவர் இன்று சென்னைக்கு திரும்புவதாக இருந்தது.
இந்த நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் இன்று கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்கை கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மங்களூரு விமான நிலையம் செல்கிறார்.
மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாணியை பின்பற்றி தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய்யும் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P