Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 12 ஜூன் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி நகராட்சி மன்ற கூட்டத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைத்து திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
கூட்டம் தொடங்கியபோது திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படத்தை கூட்ட அரங்கில் வைத்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக கவுன்சிலர்கள் கோஷங்கள் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோதே அதிமுக கவுன்சிலர்கள் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியின் படத்தை கொண்டு வந்து அரங்கில் வைத்தனர். இதனால் மீண்டும் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நிலைமை பதற்றமடைந்த நிலையில், இரு தரப்பினரையும் அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். பின்னர் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் படங்களும் கூட்ட அரங்கில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து நகராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
இந்த சம்பவம் கிருஷ்ணகிரி நகராட்சி மன்ற கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Hindusthan Samachar / GOKILA arumugam