Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 12 ஜூன் (ஹி.ச.)
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று காலையில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் 9வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலு மூக்கு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை காரணமாக பாபநாசம் மணிமுத்தாறு சேர்வலாறு ஆகிய அணைகளுக்கு நீர் வரத்தும் அதிகரித்துள்ளது இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் 9வது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தண்ணீரின் வேகமும் மிக அதிகமாக இருக்கிறது இதனால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்த பிறகு மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் தற்போது அருவியை பார்ப்பதற்கு மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்
Hindusthan Samachar / ANANDHAN