Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 12 ஜூன் (ஹி.ச.)
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வருகை தந்தபோது, மருத்துவமனையில் பல்வேறு சேவைகளுக்கு பணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர் மருத்துவமனைக்கு ஆய்வுக்காக வருவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் தீவிர ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.
மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நேரடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரங்கிற்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அவரை, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது சிலர், மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் பிற சேவைகளுக்காக பணம் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இதைக் கேட்ட அமைச்சர், நான் மீண்டும் வருகிறேன். அப்போது இது குறித்து முழுமையாக விசாரணை நடத்துகிறேன் என்று உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
மேலும், மருத்துவமனை வளாகத்தில் இருந்த பொதுமக்கள் பலரும் அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்து, அவரது பணிகள் சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam