திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் முகேஷ் அம்பானி வழிபாடு
திருப்பதி, 12 ஜூன் (ஹி.ச.) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி, இன்று ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள திருவேங்கடவன் திருக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரது மகன் ஆனந்த் அம்பானி மற்றும் மருமகள் ராதிகா மெ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் முகேஷ் அம்பானி வழிபாடு


திருப்பதி, 12 ஜூன் (ஹி.ச.)

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி, இன்று ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள திருவேங்கடவன் திருக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

அவருடன் அவரது மகன் ஆனந்த் அம்பானி மற்றும் மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் உடனிருந்தனர்.

தரிசனத்தின்போது முகேஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் கோயிலில் வழிபடுவதற்கான பாரம்பரிய உடைகளை அணிந்திருந்தனர்.

கடந்த மாதம், முகேஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோர் பெங்களூருவில் உள்ள ஆர்ட் ஆஃப் லிவிங் அறக்கட்டளையின் சர்வதேச மையத்திற்கு சென்றனர்.

அறக்கட்டளையின் 45-ஆம் ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்கள், ஆன்மிகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்து ஆசி பெற்றனர்.

சேஷாசல மலையின் ஏழாவது சிகரத்தில் அமைந்துள்ள திருமலை திருவேங்கடவன் கோயில், இந்தியாவின் மிகவும் புனிதமான இந்து தலங்களில் ஒன்றாகும். பாலாஜி என்றும் அழைக்கப்படும் வேங்கடவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த பழமையான கோயிலுக்கு, ஆண்டுதோறும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலரும் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்து ஆசி பெறுவது வழக்கம்.

Hindusthan Samachar / vidya.b