Enter your Email Address to subscribe to our newsletters

புது டெல்லி , 12 ஜூன் (ஹி.ச.)
இந்தியாவின் முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரரும், பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா (49) உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது மறைவு இந்திய விளையாட்டு உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பல பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஜஸ்பால் ராணா, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு அவர் உயிரிழந்தார்.
ஜஸ்பால் ராணாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஜஸ்பால் ராணாவின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவு இந்திய விளையாட்டு உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் தனது சிறப்பான சாதனைகள் மூலம் நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
அவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக மட்டுமல்லாமல், இளம் வீரர்களை உருவாக்கிய அர்ப்பணிப்புமிக்க பயிற்சியாளராகவும் திகழ்ந்தார். விளையாட்டின் மீது அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் சேவை மனப்பான்மை பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.
அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் விளையாட்டு உலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஜஸ்பால் ராணாவின் மறைவுக்கு விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA