பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு - விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 17 வரை நீட்டிப்பு
சென்னை, 12 ஜூன் (ஹி.ச.) 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்களது விடைத்தாள்களின் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுத்
பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு - விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 17 வரை நீட்டிப்பு


சென்னை, 12 ஜூன் (ஹி.ச.)

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்களது விடைத்தாள்களின் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

முன்னதாக அறிவிக்கப்பட்ட கடைசி தேதி முடிவடைந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று வரும் ஜூன் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், தங்கள் பள்ளிகள் மூலமாகவோ அல்லது அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகவோ உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

மேலும், பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 9498383075, 9498383076 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்வுத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b