Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 12 ஜூன் (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் தொடர் மின்வெட்டு காரணமாக விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்வெட்டு காரணமாக விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பயிர்கள் வாடி விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பையும் மனவேதனையையும் சந்தித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடி திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படாத நிலையில், மறுபுறம் தொடரும் மின்வெட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் பாதித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயிகளின் நிலைமை பரிதாபகரமாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் மின்வெட்டு பிரச்சினைக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P