புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்ப காலக்கெடு ஜூன் 15 வரை நீட்டிப்பு
புதுச்சேரி, 12 ஜூன் (ஹி.ச.) புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்ப காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி, விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி வரும்
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்ப காலக்கெடு ஜூன் 15 வரை நீட்டிப்பு


புதுச்சேரி, 12 ஜூன் (ஹி.ச.)

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்ப காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதி, விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

முன்னதாக அறிவிக்கப்பட்ட காலக்கெடு முடிவடையும் நிலையில், மாணவர்களிடமிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கலை, அறிவியல், வணிகவியல், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதுநிலை பட்டம் பயில விரும்பும் மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

விண்ணப்பிக்கும் மாணவர்கள் தேவையான கல்விச் சான்றிதழ்கள், புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை முறையாக பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், காலதாமதத்தை தவிர்க்க கடைசி நாளுக்காக காத்திருக்காமல் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறும் பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலநீட்டிப்பு, இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு ஒரு கூடுதல் வாய்ப்பாக அமையும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b