அரசியலில் நுழைய சூழ்நிலையே காரணம் - இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடும் ராகவா லாரன்ஸ்
சென்னை, 12 ஜூன் (ஹி.ச) ராகவா லாரன்ஸ் தான் அரசியலில் நுழைவது தொடர்பாக முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அரசியலில் நுழைவேன் என்று ஒருபோதும் கற்பனை செய்ததில்லை என்றும், பணம் சம்பாதி
Lawrence


Nnn


சென்னை, 12 ஜூன் (ஹி.ச)

ராகவா லாரன்ஸ் தான் அரசியலில் நுழைவது தொடர்பாக முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

அரசியலில் நுழைவேன் என்று ஒருபோதும் கற்பனை செய்ததில்லை என்றும், பணம் சம்பாதிப்பதோ அல்லது தேர்தலில் போட்டியிடுவதோ தனது நோக்கமாக இருந்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தான் நம்பும் ஒருவருக்கு துணையாக இருந்து, தனிநபராக செய்து வரும் சமூக சேவையை மேலும் பெரிய அளவில் முன்னெடுக்க வேண்டும் என்பதே தனது எண்ணமாக இருந்ததாக கூறியுள்ள அவர், தற்போதைய சூழ்நிலைகள் தன்னை அரசியலில் நுழைய வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் காணொளியில், அரசியல் குறித்த தனது புரிதல், அரசியல் தனது வாழ்க்கையில் நுழைந்த விதம், அரசியல் பற்றிய தனது தாயின் கண்ணோட்டம் மற்றும் தனது பயணத்தை வடிவமைத்த முக்கிய சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸின் இந்த அறிவிப்பு அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது அரசியல் பயணம் குறித்த முழுமையான விவரங்கள் காணொளி வெளியான பின்னர் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ