இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, 12 ஜூன் (ஹி.ச.) நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரண
மழை


தமிழ்நாடு, 12 ஜூன் (ஹி.ச.)

நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு வாரத்திற்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, கோவை, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் எனக் கணித்துள்ளது.

அதேபோல, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P