Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 12 ஜூன் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியிலிருந்து, முன்னோர்களுக்கான திதி சடங்குகளை செய்வதற்காக 24 பேர் வேன் ஒன்றில் ராமேஸ்வரம் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை பகுதியில் வந்தபோது, எதிர்பாராத விதமாக வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சாலையோரத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தின் தாக்கத்தால் வேனில் பயணம் செய்தவர்களில் 14 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் போலீசார் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விபத்து தொடர்பாக மண்டபம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN