Enter your Email Address to subscribe to our newsletters

ராணிப்பேட்டை, 12 ஜூன் (ஹி.ச.)
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது பொலேரோ சரக்கு வாகனம் மோதியதில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரியைச் சேர்ந்த வேலு (60), தனது பேரப்பிள்ளைகளான குணஸ்ரீ (7), அஸ்வந்த் (5) மற்றும் அஜய் (7) ஆகியோரை காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியான சரஸ்வதி வித்யாலயா பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த பொலேரோ சரக்கு வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த கோர விபத்தில் வேலு, குணஸ்ரீ மற்றும் அஸ்வந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த அஜய் (7) உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவேரிப்பாக்கம் போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிக்குச் சென்ற வழியில் நிகழ்ந்த இந்த சோக விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam