சென்னையில் இன்று கல்வி அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் - அனைத்து மாவட்ட அதிகாரிகளும் பங்கேற்பு
சென்னை, 12 ஜூன் (ஹி.ச.) சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் கல்வித்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. மாநில அளவிலான இந்த முக்கிய கூட்டத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த முதன்
சென்னையில் இன்று கல்வி அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் - அனைத்து மாவட்ட அதிகாரிகளும் பங்கேற்பு


சென்னை, 12 ஜூன் (ஹி.ச.)

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் கல்வித்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

மாநில அளவிலான இந்த முக்கிய கூட்டத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள், கற்றல் தர மேம்பாடு, மாணவர்களின் தேர்ச்சி விகிதம், அரசின் புதிய கல்வித் திட்டங்களின் செயலாக்கம் மற்றும் வரும் கல்வியாண்டிற்கான திட்டமிடல் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மாவட்ட வாரியாக கல்வித்துறையில் நிலவும் சவால்கள், உட்கட்டமைப்பு தேவைகள் மற்றும் ஆசிரியர் பணியிடங்கள் குறித்தும் அலுவலர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

மாணவர்களின் நலனை மையமாகக் கொண்டு கல்வித்தரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதற்கான செயல் வழிமுறைகள் குறித்து உயர் அதிகாரிகள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

இந்த ஆய்வுக்கூட்டம் மாநிலம் முழுவதும் கல்வி நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b