தென் சென்னை மேற்கு மாவட்ட மதிமுக செயலாளர் சைதை ப. சுப்பிரமணி கட்சியில் இருந்து விலகல்
சென்னை, 12 ஜூன் (ஹி.ச.) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த சைதை ப. சுப்பிரமணி, தனது பதவியில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்
Saidai P. Subramani, the South Chennai West District Secretary of the MDMK, has resigned from the party.


சென்னை, 12 ஜூன் (ஹி.ச.)

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த சைதை ப. சுப்பிரமணி, தனது பதவியில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,

தனிப்பட்ட குடும்பச் சூழ்நிலைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக மதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய சைதை ப. சுப்பிரமணி, தென் சென்னை மேற்கு மாவட்டத்தில் கட்சியின் முக்கிய முகமாகச் செயல்பட்டு வந்தார்.

அவரது திடீர் விலகல், மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விலகலுக்கான காரணங்களை விரிவாக விளக்காவிட்டாலும், குடும்பம் மற்றும் அரசியல் காரணங்களை மட்டுமே அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மதிமுக தலைமை தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை.

Hindusthan Samachar / vidya.b