ஸ்ரீவைகுண்டம் பாலியல் புகார் குறித்து த.வெ.க. எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? – திமுக கேள்வி
சென்னை, 12 ஜூன் (ஹி.ச) ஸ்ரீவைகுண்டம் பாலியல் புகார் விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாட்டை கேள்விக்குட்படுத்தி திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக திமுக தனது எக்ஸ் தள பதிவில், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரை கட்சிய
Admk head office


Jj


சென்னை, 12 ஜூன் (ஹி.ச)

ஸ்ரீவைகுண்டம் பாலியல் புகார் விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாட்டை கேள்விக்குட்படுத்தி திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தனது எக்ஸ் தள பதிவில்,

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரை கட்சியில் இருந்து நீக்கிய த.வெ.க., அதே சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டிய ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், இந்த விவகாரம் குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் புகார் அளித்த பெண்ணே கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் திமுக குற்றம்சாட்டியுள்ளது.

பாலியல் குற்றவாளிகளுக்கு துணைநின்றவர்களையும் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்றும், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக உண்மையான நடவடிக்கை எடுக்க விரும்பினால் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணனின் பதவியை பறித்து, அவரை கைது செய்ய வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தியுள்ளது.

மேலும், த.வெ.க. தலைவர் விஜய், கட்சியின் மேலிடத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் இருந்தால் இதை செய்து காட்ட வேண்டும் எனவும் திமுக தனது பதிவில் சவால் விடுத்துள்ளது.

இந்த பதிவு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்த குற்றச்சாட்டுகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.

Hindusthan Samachar / P YUVARAJ