Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 12 ஜூன் (ஹி.ச)
டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக காவல்துறை உறுதி செய்துள்ளது.
இந்த தீ விபத்தின் போது டெல்லி தீயணைப்பு சேவை (DFS) அதிகாரிகள் 6 பேரை மீட்டு, மத்திய விபத்து மற்றும் அவசர சிகிச்சை சேவைகள் (CATS) உதவியுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக காயமடைந்த 8 பேரை மீட்டு, எய்ம்ஸ் அதிர்ச்சி சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தீயணைப்புத் துறை தெரிவித்தது.
ஓக்லா தீயணைப்பு நிலையம்-1 (OKH-1) எல்லைக்குட்பட்ட மத்யம் மார்க், நயா தாரா அபார்ட்மென்ட் அருகே உள்ள கலி எண்.1-ல் இந்த கட்டிடம் அமைந்துள்ளது.
தரைத்தளம் மற்றும் 5 மேல் தளங்களைக் கொண்ட இக்கட்டிடம் குறுகிய தெருவில் அமைந்திருப்பதால் மீட்பு மற்றும் தீயணைப்பு பணிகள் சவாலாக இருந்ததாக தீயணைப்பு சேவை உதவி பிரிவு அதிகாரி (ADO) யஷ்வந்த் சிங் மீனா கூறினார்.
இன்று அதிகாலை 2:35 மணி முதல் 2:37 மணி வரை தீ விபத்து மற்றும் கட்டிடத்திற்குள் சிக்கியவர்கள் குறித்து பல அவசர அழைப்புகள் வந்துள்ளன.
இதையடுத்து 3 நீர் வண்டிகள், 2 நீர் பவுசர்கள், ஒரு சுவாச ஆதரவு பிரிவு, ஒரு விரைவு பதில் வாகனம் ஆகியவற்றை தீயணைப்புத் துறை அனுப்பியது. தொடர்ந்து வந்த உதவி அழைப்புகளைத் தொடர்ந்து கூடுதலாக ஒரு நீர் வண்டி/இலகுரக தீயணைப்பு வாகனமும் அனுப்பப்பட்டது.
கட்டிடத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் இருந்து தீ பரவியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாலை 3:45 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்பு சேவை உதவி பிரிவு அதிகாரி மீனா தெரிவித்தார். காலை 4:00 மணிக்கு தீயணைப்பு பணிகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் ஸ்டாப் மெசேஜ் டெல்லி தீயணைப்பு சேவை வெளியிட்டது. எனினும் தீ கட்டுப்படுத்தப்பட்ட பின்னரும் மீட்புப் பணிகள் தொடர்ந்தன.
இறுதிக்கட்ட நடவடிக்கையின் போது மேலும் ஒருவர் மீட்கப்பட்டார். இதன் மூலம் தீயணைப்பு சேவை குழுவினரால் மீட்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
Hindusthan Samachar / vidya.b