Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஜூன் (ஹி.ச.)
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக ஜவஹர்லால் நேரு 4,398 நாட்கள் ஆட்சி செய்தார். ஆனால், பிரதமர் மோடி நேற்றுடன் 4,399 நாட்கள் பதவியில் இருந்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் 12 ஆண்டுகால ஆட்சி புதுமைப் பெண்களின் பொற்காலம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து இன்று எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது,
மாண்புமிகு பிரதமர் திரு. மோடி அவர்களின் 12 ஆண்டுகால ஆட்சி புதுமைப் பெண்களின் பொற்காலம்!
“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்ற கவிமணியின் கூற்றினை மெய்ப்பித்து, பெண்மையைத் தேசத்தின் பேராற்றலாக உலகிற்கு உணர்த்தியவர் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள். கடந்த 12 ஆண்டுகால அவர்தம் பொற்கால ஆட்சியில், 'பெண்கள் தலைமையிலான வளர்ச்சி' என்பது வெறும் முழக்கமாக இல்லாமல், அடித்தட்டுப் பெண்களின் வாழ்வில் புதிய விடியலையும் சுதந்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அடுக்களைப் புகையிலிருந்து பெண்களைக் காக்க 'உஜ்வாலா' சமையல் எரிவாயுவையும், தூரத்துத் தண்ணீர் சுமையைக் குறைக்க 'ஜல் ஜீவன்' திட்டத்தையும் வழங்கிப் பெண்மையைப் பாதுகாத்துள்ளார் நமது பிரதமர் அவர்கள். 'ஜன் தன்' கணக்குகள் வழி அவர்களைப் பொருளாதாரச் சுதந்திரம் பெறச் செய்து, 'லக்பதி திதி'களாக மாற்றி, கிராமப்புறப் பொருளாதாரத்தின் அச்சாணியாகப் பெண்மையைப் புது அவதாரம் எடுக்கச் செய்துள்ளார்.
இன்று, வான்வெளி முதல் எல்லையைக் காக்கும் ராணுவப் படைகளின் தலைமைப் பொறுப்புகள் வரை பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக நமது பெண் சக்தி சாதனை படைத்து வருகிறது. வளர்ந்த பாரதம் (Viksit Bharat) என்னும் உன்னத இலக்கை நோக்கி நாம் நடைபோடும் இவ்வேளையில், பெண்மையைப் போற்றி வளர்த்த நமது மாண்புமிகு பிரதமர் திரு. மோடி அவர்களின் 12 ஆண்டுகால சாதனைகளை நாடெங்கும் எதிரொலிக்கச் செய்வோம்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b