மதுபோதையில் சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கிய 3 பேர் கைது
திருநெல்வேலி, 12 ஜூன் (ஹி.ச) திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை மதுபோதையில் அடித்து நொறுக்கியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கோ
மதுபோதையில் சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கிய 3 பேர் கைது


திருநெல்வேலி, 12 ஜூன் (ஹி.ச)

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை மதுபோதையில் அடித்து நொறுக்கியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கோட்டையன், இசக்கிமுத்து மற்றும் விஷால் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த நேற்று இரவு, குடிபோதையில் இருந்த மூவரும் பொது இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில் மூவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.

சேதமடைந்த கேமராக்களின் மதிப்பு கணக்கிடப்பட்டு வருவதாகவும், பொது இடங்களில் உள்ள கண்காணிப்பு சாதனங்களை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b